விசுவாசம்' படத்துக்கு அனிருத் இசை: இயக்குநர் சிவா முடிவு
விசுவாசம் படத்துக்கு இசையமைப்பதற்காக அனிருத்தை ஒப்பந்தம் செய்ய இயக்குநர் சிவா முடிவு செய்துள்ளார் அதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது.
விவேகம் படத்தைத் தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்துக்கு விசுவாசம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இயக்குநர் சிவா யுவன் இருவருமே பாடல்கள் உருவாக்கப் பணியில் ஈடுபட்டுவந்தார்கள் இந்நிலையில் சில சிக்கல்களால் இசையமைப்பாளர் பொறுப்பிலிருந்து யுவன் விலகவே யார் இசையமைப்பாளர் என்ற கேள்வி நிலவி வந்தது மீண்டும் அனிருத் தான் என்று தகவல்கள் வெளியானாலும் படக்குழுவினர.
அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை மேலும் விக்ரம் வேதா இசையமைப்பாளர் சாமிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியது ஆனால் நான் விசுவாசம் படத்தில் இருக்கிறேனா என்பது எனக்கே தெரியாது என்று சாம் தெரிவித்தார்.
இந்நிலையில் அனிருத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது அனிருத் ஒப்புக்கொண்டதை அடுத்து பொங்கல் பண்டிகைக்குப் பிறகு ஒப்பந்தத்தில் அனிருத் கையெழுத்திட உள்ளார்.
சிவா இயக்கத்தில்அஜித் நடிப்பில்வெளிவந் வேதாளம் படங்களைத் தொடர்ந்து விசுவாசம்படத்துக்கும் அனிருத் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்குகிறது 2018 தீபாவளிக்கு விசுவாசம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
Post a Comment