பிட்சை எடுத்து கேவலப்பட்டதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது ராஜினாமா செய்த எஸ்.வி.சேகர்

தலைப்பெழுத்தில் தமிழ் நடிகர்களை காறித்துப்பிய மலேசிய ஊடகம் பிட்சை எடுத்து கேவலப்பட்டதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது நடிகர் சங்க தலைமையுடன் ஏற்பட்ட மன கசப்பு காரணமாக நடிகர் எஸ்.வி சேகர் தனது ட்ரஸ்டீ பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி சார்பில்போட்டியிட்டதன் மூலம் டிரஸ்டி பதவியை பெற்றவர் எஸ்.வி.சேகர் இரு ஆண்டுகள் பதவிக்காலம் உள்ள நிலையில் எஸ்.வி.சேகர் தனது டிரஸ்டி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

நடிகர் சங்க தலைவர் நாஸர்​ ​​மற்றும் நிர்வாகிகளுக்கு அவர் எழுதியுள்ள காரசாரமான ராஜினாமா கடிதத்தில்கூறப்பட்டுள்ளதாவது நம் சங்க தேர்தல் முடிந்தபின் என்னை நடிகர் சங்க டிரஸ்டிக்களில் ஒருவனாக நியமித்து என்னுடைய.

அறிவுரைஆலோசனைகள்,வழி நடத்துதல் தேவை என கேட்டுக்கொண்டீர்கள் ஆனால் ஒரு வருடத்தில் பல மாற்றங்கள்கையெழுத்திடுவதற்கு மட்டும் டிரஸ்டி என்ற நிலை வந்த போது நான் பல மெயில்கள் அனுப்பியதற்கு எந்த பதிலும் அளிக்காமல் எனக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பினீர்கள்.

குறிப்பாக நம் நடிகர் சங்கம் 5 கிரவுண்டு அளவில் 30 கோடி ​ரூபாய் ​மதிப்புள்ள ரோடை ஆக்கிரமித்துள்ளதாக ​ ​வந்த புகரைப்பற்றி கேட்டபோது கூட அப்படி ஒன்றுமேயிலையென்று விஷாலும் கார்த்தியும் சொன்னார்கள். ஆனால் உடனடியாக வழக்கும் ஸ்டேயும் வந்தது. இப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு நடிகர் சங்கத்திற்கு ஆதரவாக வந்துள்ளது. ஆனால் எதிர் தரப்பினர் உச்ச நீதி மன்றம் செல்வதாக அறிகிறேன் அங்கு தீர்ப்பு வேறு விதமாக வந்தால் நடிகர் ஸங்கம் இதுவரை செலவழித்த பணம் என்ன ஆகும்.

அதே போல் சமீபத்தில் நடந்த மலேசிய காலை விழாவிலும் பல குளறுபடிகள்.பல கலைஞர்கள் மரியாதைக்குறைவாக நடத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்கள் என தெரிந்து கொண்டேன் குறிப்பாக இயக்குனர் சங்கதலைவர் விக்ரமன்,R சுந்தரர்ராஜன் பார்த்திபன் ,இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் போன்ற பலர். இதன் பெயர்தான் நிர்வாக கோளாறு.இப்படி அரை குறையாக செய்வதற்கு எதற்கு பார்க் ஹோட்டலில் இத்தனை நாட்கள் இவ்வளவு ரூம் போட்டு நம் டிரஸ்ட் பணம் செலவழிக்கப்படவேண்டும்.

ரஜினி கமலுக்கு மரியாதை கொடுப்பதில் தவறில்லை ஆனால் அதே மரியாதையை அனைத்து மூத்த கலைஞனர்களுக்கும் கொடுக்கத் தெரிய வேண்டும். அதை எப்படி என்று நம் முன்னாள் தலைவர் திரு. விஜயகாந்த் அவர்களிடம் பாடம் கற்றுக்கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் திருந்த வாய்ப்பில்லை.

மலேசியாவில் பிச்சை எடுக்க வந்த தமிழ் நடிகர்கள் தலைப்பிட்டு வந்த பத்திரிகை பார்க்கவில்லையா? இத்தனை பணம் மலேசிய தமிழர்கள் மூலம் சம்பாதிக்கும் நாம் நலிந்த மலேசிய தமிழ் குழந்தைகள் கல்விக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் குறைந்து போய் விடுவோமா.

பணம் தேவைதான், அது சுய மரியாதையை விற்று ச​ம்​பாதிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நம் நடிகர் சங்க மூத்த நாடகக்கலைஞர்கள் சிலரை அழைத்துக் சென்று அரிச்சந்திர மயானகாண்டம் காட்சி நடித்திருந்தால் (15 நிமிடம் மட்டுமே வரும் ) அது நீங்கள் நாடக கலைஞர்களை உண்மையாக நேசிக்கிறீர்கள் ஓட்டுக்காக அல்ல என்றாவது தெரிந்து இருக்கும். அதையும் செய்யவில்லை​.

அடுத்தமுறை வரும் தேர்தலில் நீங்கள் யாரும் ஜெயிக்கவும் முடியாது என கூறிக்கொள்கிறேன்.​ இவ்வுலகில் யாரும் நிரந்தரமில்லை என்பதை காலமும் அனுபவமும் உங்களுக்கு உணர்த்தும். பொது வாழ்வில் எவ்வளவு நேர்மையாக வாழ வேண்டும் என்று நம் மூத்த கலைஞர் திரு சிவகுமார் அவர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள்.

என் மனசாட்சிக்கு எதிராக நம் சங்கத்தின் பக்கம் ஏற்படும் தவறுகளுக்குநான் உடன்பட முடியாது என்பதாலும் டிரஸ்டி என்ற பதவி நடிகர் சங்கத்தை பொருத்த வரையில் ஒரு அலங்காரப்பதவியாக கருதப்படுவதாலும்,மற்ற சகா கலைஞர்களுக்கு உங்களால் ஏற்பட்டஅவமரியாதைக்காகவும் எனக்களிக்கப்பட்ட டிரஸ்டி பதவியை ராஜினாமா செய்கிறேன் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

உடைந்த வெற்றிக்கூட்டணி – நடிகர் அஜித்குமாரால் மீண்டும் இணைந்த கதை

‘ධනංජය ඉවතට..කුසල් ඇතුළට..’- අලුත්ම ක‍්‍රීඩකයකු සමගින් තුන්කොන් තරගාවලියට නම් කළ ශ‍්‍රී ලංකා සංචිතය මෙන්න

‘හතුරු අයියා වැඩ කරන හැටි මම දන්නවා..සමහරු අකමැති වෙයි’-මැතිව්ස් යළි බර කරට ගනිමින් කියපු ආන්දෝලනාත්මක කතාව මෙන්න