உடைந்த வெற்றிக்கூட்டணி – நடிகர் அஜித்குமாரால் மீண்டும் இணைந்த கதை
பொதுவாக சினிமாவில் சில கூட்டணிகள் இணைந்தாலே எதிர்பார்ப்பு எகிறிவிடும். அந்த பட்டியலில், இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் – இசையமப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணிக்கு முக்கிய இடம் உண்டு
வாரணம் ஆயிரம் படத்திற்கு பிறகு ஏற்பட்ட சில பிரச்னைகள் காரணமாக கெளதம் – ஹாரிஸ் கூட்டணியில் விரிசல் வந்தது அனைவரும் அறிந்த விஷயம்.
பொதுவாக சினிமாவில் சில கூட்டணிகள் இணைந்தாலே எதிர்பார்ப்பு எகிறிவிடும். அந்த பட்டியலில், இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் – இசையமப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணிக்கு முக்கிய இடம் உண்டு.
வாரணம் ஆயிரம் படத்திற்கு பிறகு ஏற்பட்ட சில பிரச்னைகள் காரணமாக கெளதம் – ஹாரிஸ் கூட்டணியில் விரிசல் வந்தது அனைவரும் அறிந்த விஷயம்.
இந்த படத்திற்கு பிறகு, ஹாரிஸ் – கெளதம் கூட்டணி இணைய வாய்ப்பே இல்லை என்ற பேச்சு எழுந்தது. ஆனால், நடிகர் அஜித்தின் முயற்சியால் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்தனர். ஆம், என்னை அறிந்தால் படத்திற்கு இசையமைக்க இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அனிருத்திடம் தான் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன்.
ஹாரிஸ் ஜெயராஜ் – கெளதம் இடையே உள்ள பிரச்னையை அறிந்த அஜித்குமார். கெளதமிடம் நீங்கள் ஏன் மீண்டும் ஹாரிஸ் ஜெயராஜுடன் இணையக்கூடாது என்று வேண்டுகோள் வைத்தது மட்டுமில்லாமல், என்னை அறிந்தால் படத்திற்கு அவரையே இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.

Comments
Post a Comment